NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

9533 செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 9533 செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அடிப்படை ஊதியத்தில் பணியாற்றும் 11 ஆயிரம் செவிலியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 7700 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 7000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து செவிலியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த கணேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். போராட்டத்திற்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் செயலாளர் அன்பு பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில் ஒப்பந்த செவிலியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.சுகாதார துறை முதன்மை செயலாளரை தலைவராகவும், ஊரக சுகாதார பணிகள் இயக்குனரக பிரதிநிதியை செயலாளராகவும் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவில், நிதித்துதுறை, மாநில சுகாதாரசங்கம், மருத்துவ பணிகள் இயக்குநரகம் , பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் எனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 9533 ஒப்பந்த செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரமாக்கப்படுவார்கள். எனவும் அரசு வரும் நிதியாண்டு இறுதிக்குள் 200 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரண்டு செவிலியர் சங்கங்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அதில் தங்களது ஒப்பந்த நியமனம், நிரந்தரம் செய்வதற்கான கோரிக்கை, அடிப்படை ஊதியமான 18ஆயிரம் கூட வழங்கப்படவில்லை.
 ரூ.7700 மட்டும் ஊதியம் அளிக்கப்படுவதால் சந்திக்கும் சிக்கல்கள், தங்கள் போராட்டத்துக்கான காரணங்கள் குறித்து விளக்கியுள்ளனர்.இதையடுத்து ஊதிய பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை தெரிவிக்க அரசுக்கு இறுதி அவகாசம்வழங்கியதுடன், வழக்கின் விசாரணையை ஜனவரி 12-ம் தேதிக்கு தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தனர்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive