கூகுளின் நவீன தொழில்நுட்பம்!

ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம்  தகவல் பரிமாற்றம் செய்ய புதிய செயற்கை நுண்ணறிவு கொண்ட மெசேஜ் வசதியை அறிமுகம் செய்துள்ளது.கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஓ.எஸ்.கள் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அதில் அவ்வப்போது புதுமையான அப்டேட்களை வெளியிடும் கூகுள் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பயனர்களின் மெசேஜ்களுக்கு எளிதில் பதில் கூறும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது.

கூகுள் Allo என அழைக்கப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பமானது பயனர்களின் வழக்கமான, அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பதிவிட்டுக்கொள்கிறது. மெசேஜ் வரும்பொழுது அதனை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் பயனரின் பதிலை, அவர் டைப் செய்வதற்கு முன்னரே எடுத்துக் கொடுக்கிறது. இந்த வசதியைப் பயனர்கள் உபயோகிக்கும்பொழுது பெரும்பாலும் டைப் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. அதற்குத் தகுந்த வார்த்தைகளை allo தொழில்நுட்பம் காண்பிக்கும். அதில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்தால் போதுமானது.

தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் தொழில்நுட்பமாம் இன்னும் அதிகாரபூர்வமாக அனைத்துப் பயனர்களுக்கும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this