ஜாக்டோ ஜியோ நாளை போராட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத நிலுவை தொகை வழங்கக்கோரி, மாவட்ட தலைநகரங்களில், 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு சார்பில், நாளை போராட்டம் நடக்கிறது.


இது குறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர், மீனாட்சி சுந்தரம் கூறுகையில், ''ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்றாமல் உள்ளது. ''இனியும் தாமதிக்காமல், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான முறையீடுகளை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு காலம் தாழ்த்தினால், மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

Share this