போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்புங்கள் - ஹைகோர்ட் உத்தரவு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கைகள் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர், நடத்துனர்கள் உடனடியாக பணிக்கு வராவிட்டால் பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு பணிக்கு செல்லலாம் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார். மேலும் வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் பதில் அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share this