ஆதாரில் முகம் மூலம் அடையாளம் காணும் வசதி ஜூலையில் அறிமுகம்

ஆதாரில் முகம் மூலம் அடையாளம் காணும் வசதி ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என யுஐடிஏஐ அறிவித்துள்ளது.

ஆதாரில் இந்திய குடிமகனின் புகைப்படம், பெயர் விவரம், முகவரி, கண் கருவிழி படலம், கை பெருவிரல் ரேகை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 12 இலக்க எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. வங்கி கணக்கு, செல்போன், சமையல் காஸ், அரசின் நலத்திட்ட உதவிகள், ரேஷன், பத்திரபதிவு உள்ளிட்ட பல அம்சங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பல திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது.
ஆனால், ஆதார் இணைப்பின் போது பல்வேறு பிரச்னைகளும், குளறுபடிகளும் ஏற்படுவதாக புகார் எழு ந்துள்ளது. ஆதாரில் உள்ள கைரேகையுடன் பலரது கைரேகை ஒத்துப்போவது கிடையாது. முதியவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனை அதிகளவில் எழுந்துள்ளது.
இதை தடுக்கவும், ஆதார் தகவல்கள் சட்டவிரோதமாக திருடுவதையும் தடுக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இந்த வகையில், ஆதாரில் உள்ள கைரேகை, ஒரு முறை சங்கேத எண் (ஓடிபி) ஆகிய ஒத்துப்போகாத நிலையில் அடையாளத்தை உறுதி செய்ய புதிய வசதியினை கொண்டு வர ஆதாரை செயல்படுத்தும் யுஐடிஏஐ முடிவு செய்துள்ளது.
''முகத்தை வைத்து உறுதி செய்யும் தொழில்நுட்பம் ஆதாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆதாரில் முகம் கண்டறியும் புதிய பாதுகாப்பு வசதி ஜூலை 1-ம் தேதியில் இணைக்கப்படுகிறது. கைரேகை அங்கீகாரத்தில் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் முதியவர்களுக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இந்த வசதி இருக்கும். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும்'' என யுஐடிஏஐ சிஇஓ பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

Share this