சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2ல் அடங்கிய, துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் நிலை- - 2, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட, 18 வகை பதவிகளுக்கு, 2016 ஆக., 21ல் முதன்மை தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும், 1,094 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடந்தது. தேர்வில், 9,833 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதிபடி, 2,166 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜன., 22 - பிப்., 19 வரை நேர்காணல் நடக்கும். தேர்வர்களின் விபரங்கள் www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments