மேஷம் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.
அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,வெளிர் நீலம்

ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே,இளஞ்சிவப்பு  

மிதுனம் திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். நட்பு வட்டம் விரியும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவி கிட்டும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிளிப்பச்சை 

கடகம் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ஊதா  

சிம்மம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்& மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம் 

கன்னி ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே,வைலெட்  

துலாம் வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,நீலம் 

விருச்சிகம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்-. பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,கிரே  

தனுசு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை

மகரம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள்,ப்ரவுன்  

கும்பம் சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை 

மீனம் உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு,இளம்மஞ்சள்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments