ஜியோவை போட்டுத்தள்ளிய டாடா டோகோமோ : நாள் ஒன்றிக்கு 1.4ஜிபி அறிவித்து அதிரடி.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்கு பின்னர் காணாமல் போன இந்திய டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்த டாடா டோகோமா, அதன் புதிய திட்டமொன்றை அறிவித்து தன் இருப்பை காட்டிக்கொண்டுள்ளது.அறிவிக்கப்பட்டுள்ள டாடா டொகோமோ நிறுவனத்தின் ப்ரீபெயிட் திட்டமான ரூ.119/- ஆனது அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கான ஒரு திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அது யாருக்கெல்லாம் கிடைக்கும்.? கூறப்படும் ரூ.119/-ன் நன்மைகள் மற்றும் செல்லுபடி காலம் என்ன.? மேலும் சந்தையில் கிடைக்கும் சிறந்த டாடா டோகோமோ திட்டங்கள் என்னென்ன.?


செல்லுபடி

நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் இந்த டோகோமோ ரூ.119/- ஆனது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது இதன் செல்லுபடி காலத்தின் கீழ் முதன் 39.2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
வரம்பற்ற அழைப்புகள்
டேட்டா நன்மைகள் மட்டுமின்றி இந்த ரூ.119/- ஆனது வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. அதாவது ரூ.199/- என்கிற புள்ளியை சுற்றி பார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்களால் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நன்மைகளை இனி டாடா டோகோமோவும் வழங்கும்.
நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்
ரோமிங் அழைப்புகள் உட்பட "வரம்பற்ற" குரல் அழைப்பு நன்மையை வழங்கினாலும் கூட ரூ.119/- ஆனது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜியோ உட்பட இதர நிறுவனங்களை போலவே நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.


அணுக கிடைக்காவிடில்

இந்தத் திட்டம் தற்போது தேர்ந்தெடுத்த வட்டாரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை மீண்டுமொரு குறிப்பிட விரும்புகிறோம். ஒருவேளை இந்த ரூ.119/- திட்டம் உங்களுக்கு அணுக கிடைக்காவிடில் டாடா டோகோமோ ரூ.179/- என்கிற திறந்தவெளி சந்தை திட்டத்துடன் செல்லவும்.
ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார்
ஏனெனில் ரூ.179/- திட்டமும் ரூ.199/- வழங்கும் அதே நன்மைகளை அனைவர்க்கும் வழங்கி வருகிறது. மேலும் முன்னர் குறிப்பிட்டப்படி, இதே நன்மைகளை ஏர்டெல் ரூ.199/-க்கும், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களும் ரூ.199/-க்கும் வழங்கி வருகின்றன.
மொத்தம் 90 நாட்கள்
ரூ.119 மற்றும் ரூ.179/- திட்டங்களுடன் டாடா டொகோமோ ரூ.229, ரூ.348, ரூ.349 மற்றும் ரூ.499/- ஆகிய திட்டங்களையும் வழங்கி வருகிறது. இதில் ரூ.499/- திட்டமானது ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்பு (ரோமிங் உட்பட) மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 90 நாட்களுக்கு வழங்குகிறது.


28 நாட்களுக்கு வழங்குகிறது

அதே நேரத்தில் ரூ.349/- ஆனது மேற்குறிப்பிட்ட அதே நன்மைகளை 56 நாட்களுக்கு வழங்குகிறது. ஒரு சில நாட்களுக்கு முன், டாடா கோமோவின் ரூ.82/- ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமானது. அடித்து 2ஜிபி அளவிலான டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 100 எஸ்எம்எஸ்/நாள் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது.


பார்தி ஏர்டெல் உடன் இணைந்துள்ளது

இதே மாதிரியான நன்மைகளை ஜியோ அதன் ரூ.98 திட்டத்தின் கீழும், பார்தி ஏர்டெல் அதன் ரூ.93/-ன் கீழும் வழங்கி வருகிறது. டாடா டொகோமோ ஆனது முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் உடன் இணைந்துள்ளதுடன், தற்போது நாடு முழுவதும் உள்வட்ட ரோமிங் (ICR) சேவைகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதாவது டாடா டொகோமோ பயனர்கள் இப்போது ஐ.சி.ஆர் மூலம் ஏர்டெல் நெட்வொர்க்கின் 3ஜி டேட்டா சேவையைப் பெற்று வருகின்றனர்.

Share this

0 Comment to "ஜியோவை போட்டுத்தள்ளிய டாடா டோகோமோ : நாள் ஒன்றிக்கு 1.4ஜிபி அறிவித்து அதிரடி.! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...