அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'!!

தமிழக பள்ளி கல்வித்துறையின் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்த, 8,000 பேர் விளக்கம் அளிக்கும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.

தமிழக பணியாளர் சீர்திருத்தம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, உயர்கல்வி படிக்கவும், சொத்துக்கள் வாங்கவும், வெளிநாடு செல்லவும், தங்கள் துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெறாவிட்டால், விதிமீறலாக கருதப்பட்டு, துறை ரீதியாக ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில்,
அனுமதி பெற்று, உயர்கல்வி படித்து முடித்தால், அவர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்கப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு, உயர்கல்வி ஊக்க ஊதியம்கேட்டு, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் பலர் கடிதம் அனுப்பினர். அவற்றை பரிசீலித்த போது, பெரும்பாலானவர்கள், தங்கள் துறை தலைவர்களிடம் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்துள்ளது தெரிய வந்தது.இதையடுத்து, முன் அனுமதி பெறாமல், உயர்கல்வி படித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். இதை பின்பற்றி, அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும்மாவட்ட கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனுமதி பெறாமல் படித்தவர்களுக்கு, விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும், 8,000 பேரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.உயர்கல்வி படித்தது எப்படி; படிக்க சென்ற போது, பணியின் நேரம் கைவிடப்பட்டதா; உயர்கல்வி படித்த காலம் எப்போது; துறை தலைமைக்கு தெரியாமல், உயர்கல்வி படித்த காரணம் என்ன என, பல்வேறு வகையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சரியாக விளக்கம் தராதவர்கள் மீது, '17 - பி' என்ற விதிமீறல் குற்றச்சாட்டில், 'மெமோ' கொடுக்கவும், பதவி உயர்வை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தினமலர் செய்தி

Share this

2 Responses to " அனுமதியின்றி உயர் கல்வி படித்தது எப்படி ? 8,000 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'!!"

  1. If Staff apply for Higher study in proper time but Permission not given by Department what to do?

    ReplyDelete
  2. That is their duty but it is our duty.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...