போராட்டத்தை கைவிட்ட மாற்று திறனாளிகள்

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாற்று திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, குறித்த விபரங்களை மாற்றுத்திறனாளிகள் சங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டது. உரிய பதில் கிடைக்கவில்லை. இதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, சங்கம் அறிவித்தது.
இந்நிலையில், சங்கத்துடன், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ், போலீசார் முன்னிலையில் பேச்சு நடத்தினார். இதில், சங்கத்தினர் கோரிய புள்ளி விவரங்கள் வழங்குவதாக ஒப்புக் கொண்டதால், போராட்டம் கைவிடப்பட்டது

Share this