புத்தக வங்கி திட்டம் தகவல் சமர்ப்பிக்க கெடு

புத்தக வங்கி திட்டத்தில், பள்ளிகளில் சேகரிக்கப்பட்ட பழைய பாடப்புத்தகங்கள் குறித்த தகவல்களை, வரும், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென, தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:டில்லி, பசுமை தீர்ப்பாய கோர்ட் அறிவுறுத்தல்படி, பள்ளிகளில் புத்தக வங்கி திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், ஏராளமான மரங்களை அழிக்க வேண்டியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மாணவர்கள் படித்த, பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து, வரும் கல்வியாண்டில், புதிய மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் பெறப்பட்ட, பழைய புத்தகங்கள் குறித்த தகவல்களை, 23ம் தேதிக்குள், deesections@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும், அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share this