அக்டோபர் 10
உலக மன நல நாள்
தேசிய அஞ்சல் தினம்
திருக்குறள்
அதிகாரம்: நிலையாமை
திருக்குறள்: 332
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று.
விளக்கம்:
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
பழமொழி
They are able because they think they are able
உயர்வாகக் கருதினால் உயர்ந்திட முடியும்.
இரண்டொழுக்க பண்பாடு
1. காலை கடன் கழிக்காமல் மற்றும் தன் சுத்தம் பேணாமல் பள்ளி வர மாட்டேன்.
2. என் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.
பொன்மொழி
இந்த உலகம் மிக பழையதாக இருந்தாலும் அதன் வடிவம் புதிது புதிதாகிக் கொண்டே இருக்கும்.
- பாரதியார்
பொது அறிவு
1.நவீன பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ஆடம் ஸ்மித்
2. கஜுராஹோ என்ற இடம் அமைந்துள்ள மாநிலம் எது?
மத்திய பிரதேசம்
தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்
தழுதாழை
1. இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல் வலி குறையும்.
2. இந்த இலைகளை உடல்வலி இருக்கும் இடத்தில் வைத்து கட்டினால் வலி நீங்குவதாக கூறுகின்றனர்.
English words and meaning
Faith. நம்பிக்கை
Feather. இறகு
Frequency. அடிக்கடி
Federation. கூட்டமைப்பு
Flamingo. செந்நாரை
அறிவியல் விந்தைகள்
யானை
* உலகின் மிகப்பெரிய நில வாழ் விலங்கு யானை
* இதன் தும்பிக்கை ஒரு லட்சம் தசைகளால் ஆனது
* இதற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் குடிநீர் தேவை
* இதன் மிகப்பெரிய மெல்லிய காதுகளில் இரத்த தந்துகிகள் நிறைந்து காணப்படும். இவை யானை உடலின் வெப்ப நிலையை ஒழுங்கு படுத்துகிறது.
நீதிக்கதை
சதிகாரன் :
தெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் இராயருக்குக் கடிதம் ஒன்று எழுதினான். அதில் அரசர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பமிட்டு அனுப்பினான்.
கடிதத்தைக் கண்ட இராயரும் நம் தெனாலிராமன் ஏதோ அதிசயத்தைக் காட்டப் போகிறான் என்ற ஆவலில் உடனே குதிரை மீது ஏறிப் புறப்பட்டார். அவசரமாகப் புறப்பட்டதால் ஆயுதம் எதையும் கொண்டு வரவில்லை. மூடியிருந்த கதவை லேசாகத்தள்ளி "இராமா!" என அழைத்தவாறே உள்ளே நுழைந்தார். அங்கு மறைவாக நின்றிருந்த சதிகாரன் கட்டாரியால் அரசரைக் குத்த முயன்றான். சட்டென்று அவன் கரத்தைப் பிடித்து வளைத்துப் பின்புறமாகப பிணைத்து விட்டார் அரசர். தம் மன்னர் தனியாக இராமனின் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்த மக்கள் பின்னாலேயே வந்து அந்தச் சதிகாரனை அங்கேயே அடித்துக் கொன்றனர்.
மறுநாள் சபை கூடியது. தெனாலிராமன் குற்றம் சாட்டப் பட்டு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டான். அரசரைக் கொலை செய்ய முயற்சிப்பது பெரும் குற்றம். அதற்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. சதிகாரனுக்கு ஆதரவளித்ததால் தெனாலிராமனும் குற்றவாளியென்று கூறி அவனுக்கு மரண தண்டனை அளித்தார் கிருஷ்ணதேவராயர. . .
தெனாலிராமன் "அந்த சதிகாரன் என் உறவினன் என்று சொல்லிக்கொண்டு வந்ததால் இடமளித்தேன். அவன் இப்படி சதி செய்வான் என்று தெரியாது." என வாதாடிப் பார்த்தான். அறியாமல் நேர்ந்த தவறுக்கு மன்னிப்பு வேண்டினான். அரசர் சற்று நேரம் சிந்தித்தார். பிறகு சொன்னார்." இராமா! சட்டப்படி குற்றம் சாட்டப் பட்ட உன்னை மன்னிக்க முடியாது. வேண்டுமானால் உன் விருப்பப்படி சாக அனுமதி அளிக்கிறேன். நீ எப்படி சாக விரும்புகிறாய் என்பதைச் சொல். அதை நிறைவேற்றுகிறேன்." என்றார்.
ஒரு நிமிடம் தெனாலிராமன் சிந்தித்தான். பிறகு சட்டென்று " அரசே! நான் வயதாகி முதுமை அடைந்த பிறகு இயற்கையாக சாக விரும்புகிறேன்." என்றான். அரசர் அவன் புத்தி கூர்மையை மெச்சி அப்படியே வாக்களித்து அவனை விடுதலை செய்தார். தெனாலிராமன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.
இன்றைய செய்திகள்
10.10.18
* வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
* சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 55 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அறுவை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
* தனி தகவல் திருட்டு காரணமாக கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை நிரந்தமாக மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
* தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
* ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியாவுக்கு உலக சாதனையுடன் முதல் தங்கத்தை ஈட்டி எறிதலில் பெற்றுத் தந்தார் சந்தீப் செளத்ரி.
மொத்தம் 3 தங்கம் உள்பட 11 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.
Today's Headlines
🌸 Chennai Meteorological Cente announced the possibility of hurricane evacuation in 24 hours in the Bay of Bengal
🌸The HealthMinister C.V Vijayabaskar, opened The heart, lung transplant surgery centre in Rajiv Gandhi General Government Hospital in Chennai for about 55 lakhs.
🌸Google has announced that it will close the Google Plus social network due to personal information stealing.
🌸The National Green Tribunal has filed a case against the implementation of the neutrinos project in Theni. Following the end of the Tamil Nadu government's argument, the verdict was postponed.
🌸Sandeep Chowdhury bagged India's first gold medal for India in the Asian Games held in Jakarta.
India has 11 medals in total including 3 gold🌹.
Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...