வோடபோன் நிறுவனம் இன்று சிறப்பான இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்தது, மேலும் அந்நிறுவனத்திற்கு போட்டியாக தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் அசத்தலான டேட்டா நன்மை தரும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில்
உள்ளது.
ஏர்டெல் புதிய திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ள ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்க ரூ.1.5ஜிபி டேட்டா வீதம்
70 நாட்கள் பயன்படுத்த முடியும்.
மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஜியோ:
ஜியோ வழங்கும் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் இலவச வாய்ஸ் கால், ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.349 திட்டம்:
ஜியோ வழங்கும் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் இலவச வாய்ஸ் கால், ரோமிங், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் இதற்குமுன்பு அறிமுகம் செய்த சில திட்டங்களைப் பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...