தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் ரூ.125 எத்தனை சேல்னல் கிடைக்கும் தெரியுமா?

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.
நிறுவனம் 205 சேனல்கள் கொண்ட தொகுப்பினை ரூ.125 (வரிகள் தனி)க்கு மாத சந்தா கட்டணத்திலும், 287 சேனல்கள் பேக்கினை ரூ.175-க்கும், 407 சேனல்களைக் கொண்ட ஹெச்.டி. பேக்கினை ரூ.225க்கும் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் வாடிக்கையாளர்கள் தேவையினை கருத்தில் கொண்டு அவர்களது தாய்மொழியில் ஒளிபரப்பப்படும் டி.வி. சேனல்களை கண்டு களித்திட தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 3 தனித்தனி சேனல் பேக்களை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் தெலுங்கு சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் கன்னட சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் மலையாள சேனல் தொகுப்பில் 223 சேனல்களும் ரூ.175 (வரிகள் தனி) என்ற மாத சந்தா கட்டணத்தில் வழங்கப்படும்.
இந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி. ஆபரேட்டர்களுக்கு ரூ.100-ம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு ரூ.75-ம் பங்கீடு செய்யப்படும்.

Share this

1 Response to "தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் ரூ.125 எத்தனை சேல்னல் கிடைக்கும் தெரியுமா? "

  1. அரசு எந்த ஊர்ல செட்டாப் பாக்ஸ் தருகிறது?
    கேபிள்காரங்க தான் தனியார் செட்டாப் பாக்ஸ் தந்துகிட்டு இருக்காங்க

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...