ரூ 14,719,00,00,000 செலவு.அரசிடம் நிதி இல்லை.அரசு ஊழியர்கள் ஷாக்.முதல்வர் விளக்கம்.!!அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நிதி ஆதாரம் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு ஊழியர்களுக்கு 7_வது ஊதியக்குழுவின் அடிப்படையில் கூடுதலாக ரூபாய் 14,719 கோடி செலவிடப்படுகிறது.எனவே தற்போது அரசு ஊழியர்கள் போராட்டம் வாயிலாக வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசிடம் எந்த நீதி ஆதாரம் இல்லை.நீதி ஆதாரம் இருந்தால் அரசு ஊழியர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கப்படும் எனவே அரசின் நிலைமையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.தற்போது அரசிடம் நிதிஆதாரம் இல்லை என்று அனைவருக்கும் தெரியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Share this