NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.10.2018

அக்டோபர் 17


சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

திருக்குறள்

அதிகாரம் : இனியவை கூறல்

திருகுறள் : 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

விளக்கம் :

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

பழமொழி

Double charge will break even a cannon

 அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

இரண்டொழுக்க பண்பாடு

1. அனுதினமும் வாசிப்பை கடைபிடிக்க முயற்சிப்பேன்.

 2.ஒழுக்கத்தை, அறிவை போதிக்கும் புத்தகங்களை வாசிப்பேன்.

 பொன்மொழி

ஒன்றை ஆக்குவதும் மாற்றுவதும் அழிப்பதும்  அவரவர் கையில் தான் உள்ளது.

  - பாரதியார்

பொது அறிவு

1.ஏற்காடு எந்த மலையில் அமைந்துள்ளது?

 சேர்வராயன் மலை

2. 2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் எந்த நாட்டில்  நடைபெற உள்ளது?

 இங்கிலாந்து

தினம் ஒரு மூலிகைகளின் மகத்துவம்

பசலைக்கீரை




1. இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

2. வாய்ப்புண் குணமடைய செய்யும்.

3. இதய நோய் வருவதைத் தடுக்கும்.

4. உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

English words and meaning


Kedge   சிறிய நங்கூரம்
Keen    கூர்மை
Knell.    மணியோசை
Knoll.    குன்றின் உச்சி
Knob.   கைப்பிடி

அறிவியல் விந்தைகள்

மரகதப் புறா

1. இது நம் மாநில பறவை ஆகும்.
2. இதன் முதுகும் இறக்கைகளும் மரகதப் பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் இதற்கு இந்த பெயர் வந்தது.
3. இதற்கு மரத்தில் இருப்பதை விட நிலத்தில் நடப்பதே விருப்பம்

நீதிக்கதை

பனிக்கட்டி
கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது.

“நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?’ என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர்.

“”ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?”

“”அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை புரியும்,” என்றான்.

அரசர் உடனே பனித்துண்டு ஒன்றை கொண்டு வர ஏற்பாடுச் செய்தார்.
பனிக்கட்டியும் வந்தது. அதனை வாங்கின தெனாலிராமன் மன்னரிடம், “”அரசே! நீங்கள் இந்த பனிக்கட்டியை நிதி அமைச்சரிடம் கொடுங்கள். பின் அவர் அவரது உதவியாளரிடம் கொடுக்கட்டும். அதன் பிறகு பனிகட்டி அலுவலர்களிடம் போய்ச் சேரட்டும். அப்பொழுது உங்களுக்கு விஷயம் புரியும்,” என்றான் தெனாலிராமன்.

பனிக்கட்டி கிட்டத்தட்ட 15 அலுவலர்களை தாண்டி கடைசியில் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சேர்ந்தது. அப்பொழுது அவர் கையில் பனிக்கட்டி இல்லை. சிறிது நீர் தான் இருந்தது. பனிக்கட்டி உருகி அப்படி ஆகிவிட்டது. இப்பொழுது ராமன் சொன்னான்:

“”புரிந்ததா! மன்னா இதுதான் காரணம். பணம் இவ்வளவு பேரையும் தாண்டி கடைசி அலுவலரிடம் செல்லும் பொழுது கரைந்து விடுகிறது.

“”இதுதான் ஏழை மக்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம்,” என்றான்.

மன்னன் புரிந்து கொண்டு நிர்வாகத்தை சீர்படுத்த முனைந்தார்.

இன்றைய செய்திகள்

17.10.18

* உத்தரபிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான அலகாபாத்தின்  பெயர் பிரயாக்ராஜ் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு இம்மாதம் 18ம் தேதி பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ளது.

* தமிழக அரசு அலுவலகங்களில் முழுமையான பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்துள்ளது. கோப்புகளை வைப்பதற்கான உறைகள் காகித வடிவத்துக்கு மாறியதுடன், அலுவலக வளாகங்களில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது.

* ஏடிபி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் இடத்தை நோக்கி நெருங்கி வருகிறார் நோவக் ஜோகோவிச்.

* டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நெவால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Today's Headlines

🌻Announcing that the name of Allahabad, the main city of Uttar Pradesh, has been officially changed to Prayagraaj.

🌻The Asian-European summit will be held in Brussels on the 18th of this month.

🌻The complete plastic ban in Tamilnadu government offices has come into practice. Envelopes for layers shifted to paper, and the plastic barrier came into effect at stores in office premises.

🌻Novak Djokovic is approaching the number one spot in the ATP Tennis Rankings.

🌻Indian stars P.V. Sindhu and Saina Naval will participate in the Denmark Open Badminton Tournament🎖🤝

Prepared by
Covai women ICT_ போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive