ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் எஸ்.பி.ஐ., திடீர் கட்டுப்பாடு

புதுடில்லி, 'வங்கி வாடிக்கையாளர்கள்,
இனி, ஏ.டி.எம்., இயந்திரங்களில் இருந்து, ஒரு நாளைக்கு, 20ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும்'

என, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்து உள்ளது.நாட்டின், பொதுத் துறை வங்கிகளில், முன்னணியில் உள்ள, எஸ்.பி.ஐ., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:வங்கி சார்பில், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள, 'டெபிட்' கார்டுகளில் இருந்து, தினசரி பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை, அக்., 31 முதல் அமலுக்கு வருகிறது.ஏ.டி.எம்., இயந்திரங்களில், 'ஸ்கிம்மர்'உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தி, அதன் மூலம் வாடிக்கையாளரின் வங்கி அட்டை விபரங்களைத் திருடி, பணத்தைக்கொள்ளையடிக்கும்சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.இது போன்ற சம்பவங்களை தடுத்து, வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையிலும், 'டிஜிட்டல்' மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும், இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அனைத்து கிளைகளிலும், 'நோட்டீஸ்' ஒட்டும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.

Share this

0 Comment to "ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் எஸ்.பி.ஐ., திடீர் கட்டுப்பாடு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...