2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வித்திருவிழா

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சித் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற 2018-2019-ன் கல்வி ஆண்டிற்கான கல்வித்திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்தில் 2018-2019-ன் கல்வி ஆண்டிற்கான கல்வித்திருவிழா எடப்பாடி நகராட்சித் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இத்திருவிழாவில் 78 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நகராட்சி பள்ளிகள், நிதி உதவி பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில். சிலம்பாட்டம் ஒயிலாட்டம் , கும்மிப்பாட்டு, மனித பிரமிடு, கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, உள்ளிட்ட போட்டிகள் நடைப்பெற்றன. இந்த கல்வித் திருவிழா வட்டார கல்வி அலுவலர் சந்திரா தலைமையில் நடைப்பெற்றது.

Share this