Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.18

திருக்குறள்


அதிகாரம்:விருந்தோம்பல்

திருக்குறள்:83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

விளக்கம்:

தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

பழமொழி

Think every body alike

தன்னைப்போல பிறரை நினை

இரண்டொழுக்க பண்பாடு

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

 பொன்மொழி

 அறிவின் அடையாளம் கல்வி அல்ல.... கற்பனையே...

       - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பொது அறிவு

1.பூகம்பத்தின் தாக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு எது?

 ரிக்டர்

2. ரஷ்யாவின் தற்போதைய அதிபர் யார்?

 விளாடிமிர் புதின்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

இஞ்சி




1. எளிதில் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

2. வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும்.

English words and meaning

Ounce.           சிறிய அளவு
Outbreak.      திடீர் எழுச்சி
Ostensible.    பகட்டான
Osmosis.        ஊடுகலப்பு
Outrage.        அழி செயல்

அறிவியல் விந்தைகள்

*. சத்தம் போடாத மிருகம் ஒட்டகச் சிவிங்கி
*. ஒருபசு தன் வாழ்நாளில் இரண்டு லட்சம் டம்ளர் அளவு பால் கொடுக்கும்
*. நெருப்பு கோழியின் கண்கள் அதன் மூளையை விடப் பெரியது
*. கோலா கரடிக்கும் மனிதர்களைப் போலவே கை ரேகைகள் உண்டு.

நீதிக்கதை

குதிரை விலை :

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார்.


தெனாலிராமன்  உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.

தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாகச் சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

"சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.

போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்பேன்" என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான்.

அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொன்னேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே............ இது என்ன நியாயம்" என்றான்.

சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வழக்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.

இன்றைய செய்திகள்

25.10.18

* வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்-4) வாகனங்களை விற்பனை செய்யவோ, பதிவு செய்யவோக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* உலக அளவில் நோய் பாதிப்பை விட நீர், நிலம், காற்று மாசு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் என சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சீரமைப்பு ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

* திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதுாரில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில் தடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் 7 நாட்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, குறைந்த இன்னிங்ஸில் 10,000 ஒருநாள் ரன்களை எடுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து அவர் தனது 37-வது சதத்தையும் பூர்த்தி செய்தார்.

* இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் 321 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.

Today's Headlines

🌻 The Supreme Court has ordered not to sell or register Bharat Stage (PS4) vehicles after April 1, 2020.

🌻Environmental Assessment and Reconstructive Research Center said that the deaths caused by water, land and air pollution are more likely than the impact of the disease worldwide.

🌻The second phase will be completed in 7 days, which will be prohibited on behalf of Archeology Department in Tiruvallur District.

🌻Indian captain Virat Kohli has scored 10,000 runs in the lowest innings in the 2nd ODI against West Indies. He completed his 37th century.

🌻 In the 2nd ODI against India, West Indies took 321 runs. The match was draw🎖

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive