விருதுநகர்: அரசு பள்ளிகளில் மழலையர்
வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம் தொடர்பாக அக்.,30 வரை கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலவழி கல்வி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தவிர்க்க நடப்பு கல்வியாண்டில் 32 அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி மழலையர் வகுப்புகள் துவங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வகுப்பிற்கான புதிய பாடத்திட்டங்களை கல்வித்துறை வகுத்துள்ளது.காலை 9:30 முதல் 10:00 மணிவரை தனிநபர் விருப்ப செயல்பாடு, 10:20 வரை தொடக்க நிலை செயல்பாடுகள் (இறை வணக்கம், உடற்பயிற்சி, வருகைப்பதிவு, பகிர்ந்து கொள்தல்) 10:30 வரை கலந்துரையாடல், 11:00 வரை செய்வது மூலம் கற்றல். 11:00 முதல் 11:10 வரை ஸ்நாக்ஸ், 11:30 வரை மொழி வளர்ச்சி, 11:50 வரை உடல் இயக்க வளர்ச்சி, 12:10 வரை உணவுக்கு தயார்செய்தல், மதியம் 1:00 மணி வரை உணவு. 3:00 மணிவரை துாக்கம், 3:20 வரை ஸ்நாக்ஸ், 3:40 வரை சமூக மன எழுச்சி, 4:00க்குள் பள்ளி முடிவு பெறும்.ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இதை, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பார்த்து அக்., 30 க்குள் கருத்து பதிவு செய்யலாம் என கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்து உள்ளார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...