ஆதாருக்கு பதில் வேறு ''ப்ரூப்'' வேண்டும்.. 50 கோடி பேருக்கு செக்.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி!

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 50 கோடி மக்களிடம் ஆதாருக்கு பதில் புதிய ஆதாரங்களை கேட்க முடிவெடுத்து இருக்கிறது.

அரசின் சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயமா என்ற வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பின்படி அரசு சேவைகளை பெற ஆதார் கட்டாயமாகிறது. ஆனால் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரம் கேட்பது சட்ட விரோதம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மொபைல்
மொபைல் நிறுவனங்கள்
இனி தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் விவரத்தை மக்கள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளனர். ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு நீக்கப்பட்டது. இதன் காரணமாக இனி மொபைல் நிறுவனங்கள், சிம் கார்ட் நிறுவனங்கள் என யாரும் ஆதார் விவரங்களை கேட்க முடியாது.

கட்டாயம் ஆதாரை அளிக்க வேண்டும் என்று கோர முடியாது.

நீக்கினார்கள்
நீக்கிவிட்டார்

இதன் காரணமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ''டேட்டா பேசில்''வைத்து இருந்த ஆதார் விவரங்களையும் நீக்க வேண்டும். இதை 6 மாதத்திற்குள் செய்ய வேண்டும். இதை இப்போதே சிம் கார்ட் நிறுவனங்கள் செய்ய தொடங்கிவிட்டது. ஆதார் கொடுத்து சிம் வாங்கியவர்களின் ஆதார் விவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகிறது.

மாற்ற
மாற்ற வேண்டும்

இதனால் ஆதார் விவரம் கொடுத்து சிம் வாங்கியவர்கள் எல்லாம் தங்களது சிம் எப்போதும் போல இயங்க வேண்டும் என்றால் வேறு ஆதாரம் கொடுக்க வேண்டும். வாக்காளர் அட்டை, லைசன்ஸ் உள்ளிட்ட ஆதாரங்களை அளிக்க வேண்டும். இதன் காரணமாக மொத்தம் 50 கோடி பேர் புதிய ஆதாரங்களை அளிக்க வேண்டும். இந்த 50 கோடி பேருக்கும் விரைவில் இதுகுறித்து தகவல் அளிக்கப்படும்.

Share this