சூரத்தைச்
சேர்ந்த வைர வியாபாரியும், ஹரி கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனத்தின்
உரிமையாளருமான சவ்ஜி தோலாக்கியா, தனது ஊழியர்களுக்கு பரிசு தருவதில்
சிறந்தவர். 25 வருடங்களாக தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு கடந்த மாதம் விலை
உயர்ந்த மூன்று மெர்சிடஸ் கார் பரிசாக தந்தார்.
அதேபோல
இந்தமுறை தீபாவளி பரிசை பற்றியும் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அது
என்ன என்றால், நிறுவனத்தில் வேலை பார்க்கும் 600 ஊழியர்களுக்கு கார் ஒன்றை
பரிசாக வழங்குகிறார். இந்த தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர்
மோடி வீடியோ மூலம் கலந்துகொள்கிறார். கடந்த 2017ஆம் ஆண்டு சவ்ஜி
தோலாக்கியா, தனது நிறுவனத்தில் வேலை பார்த்த 1200 ஊழியர்களுக்கு டட்சன்
கார் வழங்கி அனைவரையும் அதிர்ச்சி ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...