670 பள்ளிகளில் அறிவியல் கூடம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

''டிசம்பர் மாத இறுதிக்குள், 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் கூடம் அமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி:


தமிழகத்தில், ௩,௦௦௦ பள்ளிகளில் நவ., இறுதிக்குள், ஸ்மார்ட் கிளாஸ் செயல்படுத்தப்படும்.வரும், டிச., மாத இறுதிக்குள், 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் கூடங்கள் அமைக்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச சைக்கிள், நவம்பர் முதல் வழங்கப்படும்.சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலி இடங்களை அறிந்து, நிரப்பப்படும். ஈரோடு மாவட்டத்தில், 400 அங்கன்வாடி மையங்களில் மின் இணைப்பு இல்லையென தகவல் வந்துள்ளது. இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Share this