அதிரடி ஆஃபர்... ரூ.8000 விலை குறைகிறது OnePlus 6!


இந்த ஆண்டின் மிக சிறந்த ஸ்மார்ட்போன்களுள் ஒன்றாக பேசப்பட்ட ஒன்ப்ளஸ் 6 மொபைலை ரூ.8000 டிஸ்கவுன்ட்டில் பெற வசதியாக அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம்.
இந்த மாதம், கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அமேசான் நிறுவனம் மீண்டும் அதிரடி ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு தர தயாராகி வருகிறது. மொபைல் போன், லேப்டாப், டிவி என பல எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, ஓன்ப்ளஸ் 6 மொபைலின் மீதான ஆஃபர் தான்.ஐபோன் எக்ஸ், சாம்சங் s9 போன்ற உச்சகட்ட தொழில்நுட்பங்கள் கொண்ட மொபைல்களுடன் போட்டி போடும் தகுதி கொண்டதாக பார்க்கப்பட்டது ஒன்ப்ளஸ் 6. அசத்தலான கேமரா, டிஸ்பிளே, ப்ராசசர் என அனைத்தையும் ரூ.34,999க்கு இந்த போன் வழங்கி வந்தது.
இந்நிலையில் வரும் 10ம் தேதி முதல் 5 நாட்கள் அமேசானின் கிரேட் இந்தியன் சேல் ஆஃபர் காலத்தில், ஒன்ப்ளஸ் 6 மொபைலின் விலை ரூ.5000 குறைக்கப்படுகிறதாம். குறிப்பிட்ட அளவிலான மொபைல்கள் மீது மட்டுமே இந்த ஆஃபர் இருக்கும் என்பதால், இதை வாங்க கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எச்டிஎஃப்சி நிறுவனத்தின் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள் மூலம் மொபைல் வாங்குவோருக்கு, 10% கேஷ்பேக் கிடைக்கும். எனவே, மொத்தமாக ரூ.26,999-க்கு ஒன்ப்ளஸ் 6 மொபைலை இந்த மாதம் நீங்கள் பெறலாம்!

Share this

0 Comment to "அதிரடி ஆஃபர்... ரூ.8000 விலை குறைகிறது OnePlus 6! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...