நரம்புக்கு பலம் தரக்கூடிய வசம்பு!

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு,
பிள்ளைவளர்த்தி என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட  உதவுகிறது.

வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும்  உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.


✸ வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு  மருந்து கடைகளிலும் கிடைக்கும். 


✸ வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். வசம்பை  விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.


✸ வசம்பை பயன்படுத்தி சளி, இருமல், செரிமான பிரச்னைகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் வசம்பு பொடி கால் ஸ்பூன் எடுக்கவும்.  இதனுடன் சிறிது கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, மிளகுப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், ஒரு டம்ளர் நீர்விட்டு  கொதிக்க வைக்கவும். இதைவடிக்கடி குடிப்பதால், நெஞ்சக கோளாறு, சளி, விட்டுவிட்டு வரும் இருமல் குணமாகும். செரிமானம் சீராகும்.


✸ வயிறு உப்புசம், நரம்புக்கு பலம் தரக்கூடியது. வயிற்றில் உள்ள காற்றை வெளித்தள்ளும். வயிற்று வலியை போக்கும். அல்சரை ஆற்றக்கூடியது. நெஞ்சக  சளியை போக்க கூடிய மருந்தாகிறது. வசம்பை அதிகமாக எடுத்துக் கொண்டால் குமட்டல் ஏற்படும். அளவோடு பயன்படுத்தினால் மிகுந்த நன்மையை தரும்.

Share this

1 Response to "நரம்புக்கு பலம் தரக்கூடிய வசம்பு!"

Dear Reader,

Enter Your Comments Here...