ஒன்பதாம்
வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றை
திருத்தி படிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவ
சமூகஅறிவியல் புத்தகத்தில் 5 பிழைகள் இருப்பதை மாநில ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் கண்டறிந்து திருத்தி உள்ளது.
பிழைகளும், திருத்தங்களும்* குடிமையியல் பகுதி 'மனித உரிமைகள்' பாடத்தில் (பக்கம் 124), மலாலா பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அதில், இரண்டாவது பத்தியில் விடுபட்ட, 'நான் பொது இடத்தில் பேசினேன். அதனால் அடிப்படைவாதிகளின் இலக்கானேன்' என்ற வரிகளை தக்க இடத்தில் சேர்த்து படிக்க வேண்டும்.* அதே பாடத்தில் (பக்கம் 125), 'போக்ஸோ சட்டம்' துணை தலைப்பில், POCSO என்ற ஆங்கில வார்த்தை POSCO என்றும், தமிழில் 'போக்ஸோ' என்பதற்கு பதில் 'பாஸ்கோ' என்றும் தவறாக குறிப்பிடப்பட்டு இருப்பதை சரியாக திருத்தி படிக்க வேண்டும்.* அதே பாடத்தில் (பக்கம் 128) இடஒதுக்கீடு என்ற பத்தியில் 8 வது வரியில் 'பெண்களுக்கு 33 சதவீதம்' என்று இருப்பதை 'பெண்களுக்கு 30 சதவீதம்' என்றும், அதே பக்கத்தில் இடஒதுக்கீடு என்ற துணை தலைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் அட்டவணையில், 'பழங்குடியினர் 3 சதவீதம்' என்று அச்சாகி இருப்பதை 'பழங்குடியினர் 1 சதவீதம்' என்றும் சரியாக திருத்தி படிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Science
ReplyDelete