மதுரை:சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற வீரர்கள் ஊக்க மருந்து, ஊசிகள் பயன்படுத்துவதை போல மதுரையில் மாநில அளவிலான போட்டிகளிலும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
இங்கு இரு நாட்களுக்கு முன் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில ஜூனியர் தடகள
விளையாட்டு போட்டிகள், தேனி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடந்தது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர். இதில் பள்ளி மாணவர்கள் அதிகம். போட்டிகளில் வெற்றி பெற ஒரு சில மாணவர்கள் பயன்படுத்திய ஊக்கமருந்து, ஊசிகள் மைதான வளாகம், கழிப்பறைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஊக்கமருந்தை சில பயிற்சியாளர்களின் தவறான வழிகாட்டலில் சில மாவட்ட மாணவர்கள் பயன்படுத்துவது விளையாட்டு அதிகாரிகள் விசாரணையில் தெரிந்தது.
தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மற்றும் பதக்கங்கள் வெல்லும் வீரர்களிடம் ஊக்க மருந்து பயன் படுத்தப்பட்டதா என அறியரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யப்படும்.
வரும் காலங்களில் உள்ளூர் போட்டிகளிலும் இத்தகைய சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊக்க மருந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்வி நிறுவனங்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...