வேலைவாய்ப்பு
அலுவலகங்களில், 2011 முதல், 2016 வரை, வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க
தவறியவர்களுக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.வேலை
வாய்ப்பு அலுவலகத்தில், 2011 முதல், 2016 வரை, தங்கள் பதிவை புதுப்பிக்க
தவறியவர்களுக்கு, சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி, நேற்று அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
இச்சலுகையை பெற விரும்பும் நபர்கள், மூன்று மாதங்களுக்குள், ஆன்லைன் வழியே, தங்கள்பதிவை புதுப்பித்துகொள்ளலாம்.'இச்சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும். மூன்று மாதங்களுக்கு பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 2011 ஜன., 1க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாது' என, அரசு அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...