இரவில் படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால் நிம்மதியானத் தூக்கத்தை இழக்க நேரிடும். அதுமட்டுமின்றி கடுமையானக் காது வலியையும் ஏற்படுத்தும். ஆக்சிஜன் நுரையீரலுக்கு செல்வது தடைபடும். இவ்வாறு தொடர்ந்து மூக்கடைப்பு இருந்தால் நுரையீரலில் சளியானது தங்கிவிடும்.
எனவே உடனே அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.
முதல் சிகிச்சை முறை:
ஒரு கப் தண்ணீரில் 3 பூண்டு பற்களைப் போட்டு அத்துடன் ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் மூக்கில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும்.இரண்டாவது சிகிச்சை முறை:
சாதாரணமாக எப்பொழுதும் போல் டீத்தூளைப் பயன்படுத்தி டீ அருந்துவதை தவிர்த்து விட்டு தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசிப் போன்றவற்றைச் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
மூன்றாவது சிகிச்சை முறை:
சிறிது மிளகுத் தூளை நல்லெண்ணெய் சேர்த்து கலந்து அதனை மூக்கைச் சுற்றி தடவி மூச்சை உள்ளிழுக்க வேண்டும். அத்தருணத்தில் தும்மல் வரும்.
இருப்பினும் இந்தச் செயலை தொடர்ந்து செய்து வந்தால் சளித்தொல்லை நீங்கி மூக்கடைப்பில் இருந்து விடுபடலாம்.
குறிப்பு:
இந்த சிகிச்சை முறையைப் பச்சிளம் குழந்தைகளுக்குச் செய்வதை தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் இந்தச் சிகிச்சை முறையானது சளி மற்றும் மூக்கடைப்பு வருவதற்கு முன்பாக அல்லது ஆரம்பம் கட்டத்தில் செய்யப்படும் சிகிச்சை முறைகளாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...