மாநில
பாடத்திட்ட பள்ளிகளில், மாவட்ட வாரியாக, அடிக்கடி ஆய்வு நடத்தப்பட்டு,
உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி தரம் அறியப்படுகிறது.ஆனால்,
சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட, மற்ற பாடத்திட்ட பள்ளிகளில், இதுபோன்ற ஆய்வுகள்
மேற்கொள்ளப் படுவதில்லை. அதனால், பல பள்ளிகள், எந்த வசதியுமின்றியும், உரிய
அங்கீகாரம் இன்றியும் செயல்படுகின்றன. கூடுதல் கட்டணம் வசூலித்தும்,
விதிமீறல்களில் ஈடுபடுகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறைக்கு
புகார்கள் வந்தன. இதையடுத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கணக்கெடுக்க, பள்ளி
கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, மாவட்ட வாரியாக,சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அதிகாரிகள்
ஆய்வு நடத்தியுள்ளனர்.இதில், பல பள்ளிகள், எந்தவித அங்கீகாரமோ,
சி.பி.எஸ்.இ., இணைப்பு உரிமமோ இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.பல
பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வகுப்பறைகள், கழிப்பறைகள்,
குடிநீர் குழாய்கள், ஆய்வகம், நுாலகம் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள்
இல்லாததும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, மாவட்டங் களில் இருந்து, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அறிக்கைகள் வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் தருமாறு, &'நோட்டீஸ்&' அனுப்பப்பட உள்ளது.பின், டில்லியில் உள்ள சி.பி.எஸ்.இ., நிர்வாக அலுவலகத்துக்கு பரிந்துரை செய்து, அவற்றின் இணைப்பு உரிமத்தை ரத்து செய்யவும், அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.
சி.பி.எஸ்.இ.,யிடம் இணைப்பு பெறாமல், அந்த பெயரை பயன்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது, சி.பி.எஸ்.இ., வழியாக, கிரிமினல்நடவடிக்கை எடுக்கவும், பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...