டியூஷன் ஆசிரியை ஒருவர், நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும், கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாயை வென்றுள்ளார்.
இந்திய தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று கோன் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சி ஸ்டார் நெட் ஒர்க் டிவிக்களில் பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டது. தமிழில் விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் இந்தியில் தற்போது நடந்து வருகிறது. இதனை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியின் தலைப்பு கோன் பனேகா குரோர்பதி என்று இருந்தாலும் அனைத்துக் கேள்விக்கும் பதில் அளித்து ஒரு கோடி வென்றவர்கள் ஒரு சிலரே. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் அசாமை சேர்ந்த டியூஷன் ஆசிரியை பினிதா ஜெயின் ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றிருக்கிறார்.
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 14 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளித்தார் பினிதா ஜெயின். 15ஆவது கேள்விக்குப் பதில் அளித்தால் 7 கோடி ரூபாய் பரிசு என்றும், தவறான பதில் அளித்தால் வெறும் 10 லட்சத்துடன் வெளியேறலாம் என்ற டீலிங்கை ஏற்க மறுத்து ஒரு கோடி பரிசுடன் தனது போட்டியை நிறைவு செய்து கொண்டார் பினிதா ஜெயின். கவுகாத்தியில் வசிக்கும் பினிதா ஜெயின், கல்வி குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது மகன், மகள்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர் படிப்பு படித்து வருகிறார்கள்.
Congratulations madam
ReplyDelete