அரசு உயரதிகாரிகளின் குழந்தைகளை,
அரசு
பள்ளிகளில் படிக்க அனுப்பும்படி, அலஹாபாத் உயர் நீதிமன்றம், 2015ல்
பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2015ல், உ.பி.,யில் உள்ள அரசு பள்ளிகளின் தரம், மோசமாக உள்ளதாக
தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு
பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் ஒன்றாக, 'அரசு உயரதிகாரிகள்,
தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்' என
கூறப்பட்டிருந்தது.இது தொடர்பாக, வழக்கறிஞர், சிவ்குமார் திரிபாதி, உச்ச
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:அலஹாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுகளை, உ.பி., அரசு
அமல்படுத்தாததால், குழந்தைகளின் நலன் பாதிக்கப்படுகிறது. உ.பி., மாநில
அடிப்படை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் ஆரம்ப பள்ளிகளில் நடக்கும் மோசமான
நிர்வாகத்தால், ஊழல் தலைவிரித்தாடுகிறது.இந்த பள்ளிகளின் நிர்வாகத்தில் அரசு அதிகாரிகள் போதிய கவனம்
செலுத்துவதில்லை. உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டு
கடந்த பின்னும், அதை அமல்படுத்தாததால், அரசு பள்ளிகளின் வளர்ச்சி கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை,
மாநில அரசு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தவறி விட்டது.உயர் நீதிமன்ற
உத்தரவுப்படி, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காத அதிகாரிகள்,
தனியார் பள்ளிகளில் செலுத்தும் கட்டண தொகையை, அபராதமாக செலுத்த வகை
செய்யும் சட்ட திருத்தத்தை, மாநில அரசு இயற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு
மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...