தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களின் புதிய சீருடை வண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பச்சை நிற அரைகால் சட்டையும்,
இளம்பச்சை நிறக் கோடிட்ட மேல் சட்டையும் சீருடையாக வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பழுப்பு
நிறத்தால் ஆன முழுக்கால் சட்டையும், பழுப்பு நிறத்தால் ஆன கோடிட்ட மேல்
சட்டையும் சீருடையாக வழங்கப்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய சீருடை திட்டம் வரும் கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரால் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Super very good 👍
ReplyDelete