நீட் பயிற்சி வகுப்பால் எம்பிபிஎஸ் சேரும் அரசுப்பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை

தமிழக அரசு நடத்தும் நீட் பயிற்சி வகுப்புகளால்
அரசுக்கல்லூரிகளில் மருத்துவம் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 2016ம் ஆண்டு முதல் நீட் தேர்வை கட்டாயமாக்கி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

மத்திய அரசும் நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததால், நீட்  தேர்வை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டியது.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஓராண்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றது.அதனால் 2016ம் ஆண்டு, பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தது

அதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டு தமிழக அரசின் நீட் விலக்கு கோரும் மசோதாவுக்கு இதுவரை மத்திய அரசு சட்டப்பூர்வ  அங்கீகாரம் வழங்கவில்லை

இந்நிலையில் தமிழக அரசு நீட் தேர்வை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2017ம் ஆண்டு, 5 அரசுப்பள்ளி  மாணவர்களுக்கு மட்டுமே தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடம் கிடைத்தது

2017-18 கல்வியாண்டில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வீடியோ கான்பரன்ஸ் மூலம், நீட் பயிற்சி வழங்குதல் தொடங்கியது. சனி, ஞாயிற்று கிழமைகளில் நீட் பயிற்சி நடத்தப்பட்டது


Share this

1 Response to "நீட் பயிற்சி வகுப்பால் எம்பிபிஎஸ் சேரும் அரசுப்பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை"

  1. What is the total salary for PG teachers in Tamilnadu??? Fix a target to these teachers unless they will not take any interest???

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...