அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட காரணம்?நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

இதய வலியையும் நெஞ்சில் ஏற்படும் மற்ற வலிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்துகொண்டால் போதும், அச்சத்தை தவிர்க்கலாம்! மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது. சில சமயங்களில் நெஞ்சுவலிக்கு இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்னைதான் காரணமாக இருக்கும்.

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். அப்படி ஏற்படும் வலியை அலட்சியம் செய்ய வேண்டாம்.

சரி அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட காரணம்?

1. ரைப்பையில் உள்ள உணவு அமிலத்துடன் உணவுக் குழாய்க்குத் திரும்பும்போது, உணவுக் குழாயைப் பாதிக்கிறது. இதனால் நெஞ்சுக் குழியில் வலி ஏற்படலாம்.

2. ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிக்கும் போது அதன் அறிகுறியாக நெஞ்சு வலி ஏற்படும்.

3. சாப்பிட்ட பிறகு 2-3 மணி நேரம் கழித்து உறங்கச் செல்லவும். சாப்பிட்ட உடன் உறங்கினால், காலை நெஞ்சில் வலி எடுப்பது போன்ற உணர்வு தோன்றும்.

4. மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும்.

5. இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள்,பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள்,புகைபிடிப்போர், மது அருந்துவோர் இவர்களுக்கு அடிக்கடி நெஞ்சு வலிப்பது போன்றே தோன்றும்.

6, வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை இரவில் சாப்பிட்டு காலை எழும் போதும் ஒரு விதமான வலி நெஞ்சில் தோன்றும்.

Share this

0 Comment to "அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட காரணம்? "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...