அறிவியல்-அறிவோம் - மாட்டுப்பால் அருந்தலாமா?

மாட்டுப்பால் அருந்தலாமா? செயற்கைப்பால் உஷார்.

உலகில் எந்த ஓர் உயிரினமும் பிற உயிரினத்தின் பாலை குடிப்பதில்லை. மனிதனும் அப்படிதான் இருந்தான். ஒரு காலகட்டத்துக்கு பின்பு தாய்ப் பால் கொடுக்கும் வழக்கம் குறைந்தது. அப்போது பால் மாவு வணிகம் தலை தூக்கியது. இதனால், மாட்டுப் பாலுக்கான தேவை அதிகரித்தது. தொழில்முறை பால் பண்ணைகள் உருவாகின. உபரி பால் உற்பத்தி அதிகரித்தது. இதைத் தொடர்ந்து பாலாடைக் கட்டி, ஐஸ்கீரிம், சாக்லேட் என்று மிகப் பெரிய மற்றொரு வணிக உலகம் உருவானது. இந்த பேரளவிலான உற்பத்தியால் பால் என்பது இன்று இயற்கைப் பொருளாக இல்லை; அது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் செயற்கைப் பொருளாக மாற்றப் பட்டுவிட்டது. அதனைத்தான் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அருந்துகிறோம்.

மனிதர்களுக்கு பால் தேவையற்ற ஒன்று. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) அதிகம். ஒரு கப் பாலில் 6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இது இதய நோயாளிகளுக்கு நல்லதில்லை. மேலும், பாலில் கொழுப்பானது கொழுப்பு அமிலங்களாகவும் உள்ளதால், மாரடைப்புக்கு வாய்ப்புள்ளது. மாடுகளுக்கு ஹார்மோன் ஊசி போடுவதால், அந்தப் பாலைக் குடிப்பவர்கள் புராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், சூலகப் புற்றுநோய்களால் பாதிக்கப் படுவது அதிகரித்து வருகிறது.
லில் புரதம் ஒன்றுதான் முக்கியச் சத்துப் பொருள். சவலைக் குழந்தைகள், ஒல்லியாக உள்ள வர்கள், சைவம் சாப்பிடுபவர்கள், நோய்க் காலத்தில் புரத உணவைத் எடுத்துக்கொள்ள முடியாதவர் கள் வேண்டுமானால் பால் அருந்தலாம். அதுகூட அன்றைக்கு வந்த பாலை குடித்தால்தான் பாலில் உள்ள புரதம் உதவும். குளிர்ப்பதனப்பெட்டியில் நாள்கணக்கில் வைத்துக் குடித்தால் புரத அளவு குறைந்துவிடும்.

பாலில் உள்ள கால்சியம்  ஆபத்து.

கால்சியத்தில் முதல் தரம், இரண்டாம் தரம் இருக்கிறது. பாலில் இருப்பது இரண்டாம் தர கால்சியம்தான். ஆனால், கீரைகளில் பாலில் இருப்பதை விட அதிகளவு முதல் தர கால்சியம் இருக்கிறது. எலும்பு வளர்ச்சிக்காக பால் குடியுங்கள் என்கிறார்கள். இது நேர்எதிரான மற்றும் பொய்யான தகவல். மனித ரத்தத்தில் இயல்பாகவே அமினோ அமிலம் 7.4 பி.ஹெச் அளவு இருக்கிறது. பால் அருந்தும்போது இதன் அளவு உயரும். அவ்வாறு உயர்வதை குறைப் பதற்காக தானாகவே எலும்பு கரைக்கப்படுகிறது. இதனால், எலும்பு தேய்மானம் ஏற்படும் என்பது தான் உண்மை. பால் அருந்தும்போது வயிற்றில் சில மில்லி ரத்தக் கசிவு ஏற்படும் என்பதால் கர்ப்ப காலத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்கள் பால் அருந்தினால் ரத்த சோகை நோயின் தீவிரம் அதிகரிக்கும்.”

பாலில் இருக்கும் ‘லேக்டோஸ்’ சர்க்கரை சத்து, சிறுகுடலுக்குச் செல்லும்போது ‘க்ளுகோஸ், கேலக்டோஸ்’ என்று இரண்டாக பிரிகிறது. அவற்றில் ‘கேலக்டோஸ்’ மூளை, கண் மற்றும் நரம்பு மண்டலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய மானது. இதன் தேவை மூன்று வயதுவரை மட்டுமே. ஏனெனில் ‘லேக்டோஸை’ இரண்டாக பிரிக்கும் ‘கேலக்டேஸ்’ நொதி மூன்று வயதுக்கு மேல் சுரக்காது. 
மாட்டில் இருந்து கறக்கப்பட்ட பால் 3 அல்லது 4 மணிநேரத்தில் கெட்டு விடும். மூன்று மணிநேரம் வரை பால் கெடாமல் இருப்பதற்கான பொருளும் இயற்கையிலேயே பாலில் கலந்து இருக்கிறது. ஆனால், இப்போது செயற்கை முறையில் பாலை அல்லது பால் பொருள்களின் இயல்பைப் பாதுகாக்கிறார்கள்.

கலப்படப்பால் மற்றும் செயற்கை "சிந்தடிக் பால்".

ஒட்டு மொத்த இந்தியாவில் 68 சதவிகிதம்  கலப்பட பாக்கெட் பால் விற்பனையாகிறது.பாக்கெட் பாலில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே பால் இருக்கிறது. பாக்கெட் பாலில் பாதிக்கும் மேல் கெமிக்கல் இருக்கிறது. 
கொள்முதல் செய்யப்படும் பாலிலிருந்து பிற பால் பொருட்களை உற்பத்தி செய்ய கொழுப்பை நீக்குகிறார்கள். மீண்டும் பாலின் அடர்த்தி மற்றும் புரதத்தை அதிகரிக்க விலங்குகளின் கொழுப்பு அல்லது கொழுப்பு பவுடர் சேர்க்கிறார்கள். சில சமயம் பாலின் அடர்த்தியை அதிகரிக்க மைதா மாவு, ஜவ்வரிசி மாவு, ஸ்டார்ச், மரவள்ளிக் கிழங்கு மாவு சேர்க்கிறார்கள். இவ்வாறு சேர்க்கப்படும்போது பால் கெடாமல் இருக்க பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, அமோனியா, யூரியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் ட்ரை ஆக்ஸைடு இவற்றில் ஒன்றை சேர்க்கிறார்கள்.

மூன்று மாதங்கள் வரை கெட்டுப்போகாத சிந்தட்டிக் பால் உற்பத்தியும் இங்கே நடக்கிறது. இதை உற்பத்தி செய்ய மாடு தேவையில்லை. ரசாயனப் பொருட்கள் போதும். காஸ்டிக் சோடா, யூரியா, டிடர்ஜெண்ட் தூள், ஷாம்பூ ஆகியவற்றை கலந்து சுழலும் எந்திரத்தில் சுழல விடுகிறார்கள். இதனுடன் கொழுப்புச் சத்துக்காக தாவர எண்ணெய்யும், அடர்த்திக்காக மரவள்ளிக் கிழங்கு மாவு, இனிப்புக்காக சர்க்கரை அல்லது சாக்ரீம் சேர்த்து சுமார் ஒரு மணி நேரத்தில் செயற்கை பாலை தயாரிக்கிறார்கள்.
இதில் கலக்கப்படும் காஸ்டிக் சோடாவானது பாலை கெடாமல் பாதுகாக்கிறது. டிடர்ஜெண்ட் தூள் தாவர எண்ணெய்யை தண்ணீரில் கரையச் செய்கிறது. யூரியா கொழுப்பு அல்லாத பிற சத்துக்களை கூடுதலாக காட்ட உதவுகிறது. 

பாலில் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது?

ஒரு வழுவழுப்பான சாய்வான வீட்டு ஓடு மீது ஒரு துளி பாலை விடுங்கள். பால் ஓடிய பின்பு அந்த தடத்தில் வெண்ணிற கோடு இருந்தால் அது தண்ணீர் கலக்காத பால். வெண்ணிற கோடு இல்லை எனில் அது தண்ணீர் கலந்த பால். சிறிதளவு பாலில் சில துளிகள் அயோடின் சேர்க்கும்போது பால் நீல நிறமாக மாறினால் அது மாவுப் பொருள் சேர்க்கப்பட்ட பால். ஒரு தேக்கரண்டி பாலை சோதனை குழாயில் விட்டு, அதில் அரை தேக்கரண்டி சோயா பீன்ஸ் தூளை சேர்த்து கலக்குங்கள். ஐந்து நிமிடம் கழித்து சில துளிகளை சிவப்பு லிட்மஸ் தாளில் விடும்போது, தாள் நீல நிறமானால் அது யூரியா கலந்த பால்.

அடர்த்தியாக இருந்தால் அது கலப்பட பால். தண்ணீராக இருந்தால்தான் நல்ல பால். ஏனெனில் பாலில் 87 % தண்ணீர்தான் இருக்கிறது. மீதம் 9 % புரதம், லேக்டோஸ், தாதுக்கள், வைட்டமின்கள், 4 % கொழுப்பு உள்ளன.

Prepared by S.Harinarayanan

Share this

0 Comment to "அறிவியல்-அறிவோம் - மாட்டுப்பால் அருந்தலாமா?"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...