சேலம், உத்தமசோழபுரத்திலுள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தாரமங்கலம் வட்டார பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்பெற உருவாக்கப்பட்டுள்ள, வலைதளம் தொடக்க விழா, தாரமங்கலம், செங்குந்தர் கல்வியியல் கல்லூரியில், நேற்று நடந்தது. பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, வலைதளத்தை தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து, பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் விஜயலட்சுமி சங்கர் கூறியதாவது: சேலம் மாவட்டத்திலுள்ள, 20 ஒன்றியங்களில், முதலில் தாரமங்கலத்தில், பள்ளி தொடர்பான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கை, படைப்புகள், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், புகைப்படங்களாக, ஒளிப்பட காட்சியாக, மாணவர்களை கவரும் வகையில் புதுமையான முறையில் உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தேசிய ஊரக திறனாய்வு தேர்வு, தேசிய கல்வி உதவித்தொகை தகுதி தேர்வு, மாநில கற்றல் அடைவு தேர்வு உள்ளிட்டவற்றுக்கு, மாதிரி கேள்வித்தாள், தேர்வுக்கு விண்ணப்பிக்க, இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஆசிரியர்களின் புதுமை படைப்புகளை பதிவேற்ற வசதி உள்ளது. இரு மாதங்களில் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை, தாரமங்கலம் வட்டார மாணவர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...