சிறப்பாசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
தமிழகத்தில், டிஆர்பி மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
விருதுநகர், ஆமத்தூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில், எட்டு மாவட்டங்களை சேர்ந்த 322 பதின்ம பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டை யன், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். 
பின்னர் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவிலே முதன் முறையாக தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை யூடியுப் முறையில் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அரசு ஆசிரியர் தேர்வாணையம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு இம்மாத (அக்.) இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும். மேலும், பள்ளிகளில் காலியாக உள்ள 1,942 ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில், 70 சதவீதம் ஆசிரியைகள் பணி புரிவதால் பிரசவ காலங்களில் ஏற்படும் விடுப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாணவர்கள் கல்வி திறன் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.
இதற்கு மாற்றாக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களை மழலையர் வகுப்புகளாக ( யூகேஜி. எல்கேஜியாக) மாற்றி குழந்தைகளுக்கு சிறப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். ஒரு காலத்தில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற கடினமான சூழ்நிலை இருந்தது.
ஆனால், தற்போதைய அரசு, உங்களை தேடி வந்துஅங்கீகாரம் தருகிறது. பதின்ம பள்ளிகளுக்கு இன்று குரு பெயர்ச்சி.
மேலும் அரசு பள்ளிகளுக்கும், அதிமுக அரசுக்கும் எப்போதும் குரு உச்சம் தான். அக்டோபர் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சூழ்நிலையை பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றார் அவர்

Share this

1 Response to "சிறப்பாசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்"

Dear Reader,

Enter Your Comments Here...