தேசிய அளவில் நீச்சல் போட்டி காஞ்சிபுரம் மாணவி தேர்வு*இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் நடக்கும், தேசிய அளவிலான, 19 வயதிற்கு உட்பட்ட மாணவியர் நீச்சல் போட்டிக்கு, காஞ்சி பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார்


*இவருக்கு, மாவட்ட விளையாட்டு நீச்சல் பயிற்சியாளர், ஆனந்த் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த ஆண்டு மாநில அளவில், பள்ளிகளுக்கு இடையே நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளி பரிசு பெற்றுள்ளார்


*இந்நிலையில், சென்னை வேளச்சேரியில், இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், நேற்று நடந்த, தேசிய நீச்சல் போட்டிக்கான தேர்வில், 200 மீ., பட்டர்பிளை ஸ்டோர்க், 19 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஜெயஸ்ரீ தேர்வு செய்யப்பட்டார்.இந்த போட்டி, தெலுங்கான மாநிலத்தில் நடைபெற இருக்கிறது


*இந்த போட்டிக்கான ஆண் மாணவர் பிரிவில், கிஷோர்குமார், நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this

0 Comment to "தேசிய அளவில் நீச்சல் போட்டி காஞ்சிபுரம் மாணவி தேர்வு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...