தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பு: முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை


*தொலைதூரக் கல்வியில் எம்.எட்.
அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை படிக்க புதிய அரசாணை உருவாக்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
*இதுகுறித்து சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்
*பள்ளிக் கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 25,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்
*இவர்களில் பெரும்பாலானோர் தங்களது பாடத்தில் முதுநிலைப் பட்டமும், கல்வியியலில் இளநிலைப் பட்டமும் பெற்று பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
*அரசுப் பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணிபுரிபவர்கள் எம்.எட், எம்.பில். ஆகிய இரண்டு உயர்படிப்புகளை படித்தால் இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் என அரசாணை உள்ளது
*இதில் எம்.பில். பட்டம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எம்.எட். பட்டப்படிப்போ கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த பல்கலைக்கழகத்திலும் தொலைதூரக் கல்வியில் பயிற்றுவிக்கப்படவில்லை
*மேலும், பள்ளிக் கல்வித் துறையில் மேல்நிலைக் கல்வியில் முதுநிலை ஆசிரியர்கள் சிக்கலான பருவத்தை உடைய குமரப் பருவத்தினருக்கு காலத்துக்கேற்றபடி கல்வியில் புதுமைகளைப் பயன்படுத்தி கற்கவும் மாணவர்களின் உளவியல் கூறுகளை அறிந்து அவர்களை மேம்படுத்தவும் கல்வியியலில் (முதுநிலை தொழிற்படிப்பு) எம்.எட். படிப்பதென்பது அவசியமான ஒன்றாகத் தேவைப்படுகிறது. மேலும், முதுநிலை ஆசிரியர்கள் இரண்டாவது ஊக்க ஊதியம் பெறவும் உறுதுணையாக இருக்கிறது
*எனவே, தமிழக அரசு டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பைக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
அல்லது உரிய கல்வி வல்லுநர்களை ஆலோசித்து, தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வியில் எம்.எட்-க்கு பதிலாக கல்வியியல் பாடத்தில் வேறு இணையான முதுநிலை தொழிற்படிப்போ அல்லது அவரவர் சார்ந்த பாடத்தில் முனைவர் பட்டமோ அல்லது வேறு இணையான பட்டங்களை பெற்றால் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்கள் இரண்டாவது ஊக்க ஊதியம் பெறலாம் என அரசாணை வெளியிட்டு முதுநிலை ஆசிரியர் பணித்தொகுதியின் பத்து ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this

1 Response to "தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பு: முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை"

  1. Poi NEET Ku class yedunga....yeppa paaru kaasu..kaasu nu ...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...