நான்கு துறைகளில் காலியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

நான்கு துறைகளில் காலிப் பணியிடங்களை


நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இது குறித்து, டிஎன்பிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-சுற்றுலாப் பயணி அலுவலர் பணியில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு நடந்த தேர்வில் தற்காலிகமாக 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 2-இல் நடைபெறும். இதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர் பணியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. அதில், தற்காலிமாக ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நவம்பர் 11-இல் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ள 330 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 665 பேர் தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் 25 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும்.
இதே போன்று, வேளாண்மை விரிவாக்கப் பணிகள் தொகுதியில் அடங்கிய வேளாண்மை அலுவலர் பணியில் 323 இடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று 613 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 29 முதல் நவம்பர் 9 வரை நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

Share this

0 Comment to "நான்கு துறைகளில் காலியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...