சத்துணவு
மையங்களில் சமைக்கப்படும்
உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை
மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய
குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு கிடைக்க,
ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 40 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 10 ம் வகுப்பு
வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் மதிய உணவு
வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும்
தினமும் முட்டை வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு
கூடுதல் வலுசேர்க்கும் வகையில் பப்பாளி, முருங்கை மரக்கன்றுகளை
அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் வாரம் 10 மையம் வீதம் மொத்தம் 1,520 மையங்களில்
சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. அன்றைய தினம்
சமைக்கப்பட்ட உணவு 2 மணி நேரத்திற்குள் மதுரை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு
மையத்திற்கு அனுப்பப்படும். அங்கு உணவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என
சோதனை செய்யப்படும். அதன் தரம் அறிந்த பிறகே மாணவர்களுக்கு சாப்பிட
வழங்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...