எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை..! - இந்திய வானிலை மையம் கணிப்பு

எந்தெந்த தினங்களில் எவ்வளவு
மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் இன்று, கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தமிழகம், கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் எனவும்  எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஒருசில பகுதிகளில் கனமழை முதல், மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் அக்டோபர் 7ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவின் ஒருசில பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதியன்றும் மீனவர்கள் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை முதல் மிக கனமழை பெய்யு‌ம் என்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: purhiya thalaimurai

Share this

0 Comment to "எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை..! - இந்திய வானிலை மையம் கணிப்பு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...