இணையதளத்தில் சத்துணவு ஊழியர் பி.எப்., கணக்கு

சென்னை, சத்துணவு பணியாளர்கள், தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு தாள்களை, இன்று முதல், இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின், சத்துணவு மற்றும் குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரிவோர், பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ளனர். இவர்களின், 2017 - 18க்கான, பொது வருங்கால வைப்புநிதி கணக்கு தாள்கள், அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.இவற்றை சந்தாதாரர்கள் http://cps.tn.gov.in/nmp/public என்ற இணையதளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share this