NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அறிவியல்-அறிவோம்: நாம் பயன்படுத்தும் பற்பசை (Toothpaste) பற்றி தெரியுமா?

(S.Harinarayanan)

நாம் பயன்படுத்தும் பற்பசை (Toothpaste) பற்றி தெரியுமா?

ஒரு காலத்தில் உப்பு, கரி தவிர்க்க வேண்டும் என்று விளம்பரம் செய்த நிறுவனங்கள் கூட, ‘எங்கள் பேஸ்டில் உப்பு, கரி இருக்கிறது’ என்று கூறி விற்பனை செய்கின்றன. கடைக்கு டூத் பேஸ்ட் வாங்கச் சென்றால், அழகாக, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பேக்குகளைப் பார்த்து எதை எடுப்பது, எதை விடுவது என்று குழம்பாதவர்களே இருக்க மாட்டார்கள்.

பேஸ்டின் வகைகள்.

சென்சிடிவ் பற்களுக்கு, பற்சிதைவைத் தடுப்பது, புத்துணர்வு அளிப்பது, வாய் துர்நாற்றத்தை நீக்குபவை, ஈறுகளை வலிமையாக்குபவை என விதவிதமான பேஸ்ட்டுகள் கிடைக்கின்றன.  ஆனால், அதில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளன, அவை நம் பற்களுக்கு உகந்தவையா, என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை.

Toothpaste ன் மூலப்பொருட்கள்:

பற்பசைகளில் வேம்பு, லவங்கம் போன்ற இயற்கைப் பொருட்களும், கூடவே நுரை ஏற்படுத்தவும், நறுமணத்துக்காவும், சுவைக்காகவும், நிறத்தை அளிக்கவும், நீண்ட காலம் கெடாமலிருக்கவும் எனப் பல்வேறு ரசாயனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.



வேதிப்பொருட்கள்;

பற்பசையில் நுரை ஏற்படுத்த, சோடியம் லாரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்க ஸ்டேன்னஸ் ஃபுளோரைடு (Stannous Fluoride) சேர்க்கப்படுகிறது. ஈரப் பதத்துக்காகச் சார்பிட்டால் (Sorbitol), ஹுமெக்டன்ட் (Humectant) ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவைக்காக சோடியம் சாக்கரின் (Sodium saccharin) சேர்க்கப்படுகிறது. இதனுடன், உப்பு, `சலவை சோடா’ எனப்படும் சோடியம் பை கார்பனேட் (Sodium Bicarbonate), கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் டி போன்றவையும் சேர்க்கப்படுகின்றன.

Fluoride அளவு:

பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1,000 பி.பி.எம் (ppm – parts per million) அளவுக்கு மிகாமலும்,

சிறுவர்களுக்கான பற்பசையில் 500 பி.பி.எம் (ppm – parts per million) அளவுக்கு மிகாமலும் ஃபுளோரைடு இருக்க வேண்டும். பற்பசையிலேயே இது குறிப்பிடப்பட்டிருக்கும்.

பற்பசை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

*வண்ணமயமான பேஸ்ட்டைவிட வெள்ளை நிற பேஸ்ட்டே சிறந்தது.

*ஃபுளோரைடு குறைவான பேஸ்ட்டையே தேர்வுசெய்யுங்கள்.

*ஜெல் பேஸ்ட்டுகள் பற்களின் தேய்மானத்துக்குக் காரணமாகும் என்பதால், க்ரீம் பேஸ்ட்டுகளே சிறந்தவை.

*பற்களை பாலீஷ் செய்வதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் அப்ரேஸிவ் (Abrasives) எனும் ‘தேய்க்கும் பொருள்’ பயன்படுத்தப்படுகிறது. இது, பற்கள் சொத்தையாகக் காரணமாகும் ரசாயனங்கள் கொண்டது. ஆகவே, இதன் அளவு குறைந்ததாக இருக்கும் பேஸ்ட்டாகப் பார்த்து வாங்குங்கள்.

*சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியவை அடங்கிய பேஸ்ட்டுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

பச்சை நிறப் பட்டை: பற்பசை முழுக்க முழுக்க இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டது.

நீல நிறப் பட்டை: பற்பசையில் இயற்கைப் பொருட்களுடன் சில மருந்துகளும் கலக்கப்பட்டிருக்கின்றன.

சிவப்பு நிறப் பட்டை: இயற்கைப் பொருட்களுடன், அதிக அளவில் ரசாயனப் பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

கறுப்பு நிறப் பட்டை: முழுமையாக ரசாயனப் பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive