வீடியோ கால் பேசிக் கொண்டே மெயின்
திரையில் பிரவுஸ் செய்யும் வகையில் வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாட்ஸ் அப் தனது சமீபத்திய அப்டேட்டில் வீடியோவுடன் டெக்ஸ்ட் PiP Picture in Picture என்ற மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
பிக்சர் இன் பிக்சர் வீடியோ காலிங், டெக்ஸ்ட் அப்டேட் வசதி ஆண்ட்ராய்டு 4.4 வெர்சன் பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அது என்ன பிக்சர் இன் பிக்சர் வீடியோ காலிங் வசதி எனக் கேட்கிறீர்களா? அதாவது வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கும்போதே திரையை சற்று சிறியதாக்கி மெசேஜ் செய்ய முடியும். பிரவுஸ் பண்ண முடியும்.
இந்த வசதியப் பெற வாட்ஸ் அப்பின் புது அப்டேட்ஸில் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என்ற அப்டேட்டை கிளிக் செய்து பயன்பெறவும்.
வாட்ஸ் அப்பின் புகைப்படம் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ் எப்படி 24 மணி நேரத்தில் மறைகிறதோ அதேபோல் இந்த டெக்ஸ்ட் ஸ்டேட்டஸும் 24 மணி நேரத்தில் மறைந்துவிடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...