NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC Group 4 + VAO Exam 2019 - க்கு இன்று முதல் Apply செய்யலாம் .

இளநிலை உதவியாளர்,
 கிராமநிர்வாக அலுவலர் உள்பட குரூப்4 பிரிவில் காலியாகவுள்ள 5ஆயிரத்துக்கும் அதிகமானபணியிடங்களுக்குவெள்ளிக்கிழமை (ஜூன் 14)முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையத்தின்(www.tnpsc.gov.in) இணையதளத்தில்விண்ணப்பம் செய்வதற்கானஅனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளதாகதேர்வாணைய அதிகாரிகள்தெரிவித்தனர். இளநிலைஉதவியாளர், கிராம நிர்வாகஅலுவலர், தட்டச்சர் உள்ளிட்டபணியிடங்கள் குரூப் 4பிரிவுக்குள் வருகின்றன.
கடந்த 2017-ஆம் ஆண்டில் கிராமநிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் அனைத்தும்குரூப் 4 பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டன. இதையடுத்து,குரூப் 4 பிரிவில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைதொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கடந்ததேர்வு அறிவிக்கையின் போது, 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களுக்குத் தேர்வுநடத்தப்பட்டது.
இந்த எழுத்துத் தேர்வினை 15லட்சத்துக்கும் அதிகமானோர்எழுதினர். இந்த நிலையில்,குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கானஅறிவிக்கை அண்மையில்வெளியிடப்பட்டது.
இன்று முதல்விண்ணப்பிக்கலாம்:டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட தேர்வுஅறிவிக்கையின்படி, எழுத்துத்தேர்வுக்கு வெள்ளிக்கிழமை(ஜூன் 14) முதல்விண்ணப்பிக்கலாம். தேர்வுக்குவிண்ணப்பிக்க ஜூலை 14-ஆம்தேதி கடைசி நாளாகும்.இதற்கான எழுத்துத் தேர்வுசெப்டம்பர் 1-ஆம் தேதிநடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர்,இளநிலை உதவியாளர்,தட்டச்சர், சுருக்கெழுத்துதட்டச்சர், வரைவாளர் உள்ளிட்டபணியிடங்கள் குரூப் 4 பிரிவின்கீழ் வருகின்றன. கிராமநிர்வாக அலுவலர், இளநிலைஉதவியாளர் போன்ற குறிப்பிட்டசில பணியிடங்களில்காலியிடங்களின் எண்ணிக்கைஅதிகமாக இருப்பதாகடி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. எனவே,காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும்அதிகமாகவே இருக்கும் எனஅதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
முழு விவரங்கள் வெளியீடு:காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை, தேர்வுக் காலஅட்டவணை, தேர்வுஎழுதுவதற்கான கல்வித் தகுதிஉள்ளிட்ட அனைத்து விவரங்கள்அடங்கிய விரிவானஅறிவிக்கை வெள்ளிக்கிழமைகாலை தமிழ்நாடு அரசுப்பணியாளர்தேர்வாணையத்தின்இணையதளத்தில்வெளியிடப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive