1. 30 கோடி மாணவர்கள்
எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வி கொள்கைக்கு ஏன் இத்தனை அவசரம் ? 2. 3 வயது குழந்தையால் 3 மொழி படிக்க முடியுமா ?
3. 2000 பள்ளிகள் மூடும் நிலை.. அதற்கு பதில் என்ன ?
4. கல்வியில் சிறந்த நாடுகளில் 8 வகுப்பு வரை தேர்வுகளே இல்லை எனும் பொழுது, வரிசையாக 3, 5, 8 பொதுத்தேர்வு என்பது எப்படி சிறந்த கல்வியாகும் ?
5. நுழைவு தேர்வு, பொது தேர்வு, தகுதி தேர்வு என தேர்வெழுதிக்கொண்டே இருந்தால் வாழ்க்கையை உணர்ந்து படிப்பது எப்பொழுது ?
6. 2 லட்சம் மாணவர்கள் நீட் எழுதியதில் ஒருவர் தான் பாஸ் என்றால் அதற்கு என்ன பதில் ?
7. 50000 கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கபடுவதும் கோச்சிங் சென்டர்கள் அதிகரிப்பதும் தான் புதிய கல்வி கொள்கையா ?
8. 80 லட்சம் ஆசிரியர்கள் இருக்கும் இந்தியாவில் ஒரே ஒரு ஆசிரிய அமைப்பு எப்படி ஒட்டுமொத்த கல்வியை தீர்மானிக்க முடிகிறது ?
9. விதவிதமான கல்வி முறைகளில் இருந்து ஒரே ஒரு தேர்வு முறை சாத்தியமா ? அது சரியா ?
10. எதிர்கால தலைமுறையின் தலைஎழுத்து இது.. இன்னும் அதை நாம் பேசாமல் அமைதியாக ஏன் இருக்கிறோம் ?!
இந்த கல்விக்கொள்கையை இன்னும் ஆராய்ந்து நிறைய மாற்றங்கள் செய்திட வேண்டும்.., அதற்கு முதலில் கல்வி மாநில பட்டியலுக்கு வந்திட வேண்டும்.. அனைவரின் பங்களிப்பும் அதில் இருக்க வேண்டும்..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...