நிலவின் தென்துருவத்தை ஆராயும் சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. கடந்த 15ம் தேதி ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு 54 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்த போது ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்ததை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்டவுன் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது தொழில்நுட்ப கோளாறு அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திராயன்-2 விண்கலம்  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments