மாதாந்திர சம்பளதாரர்கள் வரு மான வரி
ரிட்டர்ன் தாக்கல் செய் வதற்கான கால அவகாசத்தை மத்திய நிதிஅமைச்சகம் நீட்டித் துள்ளது.
2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆகும். ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் பல பிரச்சினை களை தனி நபர்கள் எதிர்கொள்வ தால் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக அமைச்சகம் வெளி யிட்ட அறிக்கையில்குறிப்பிடப் பட்டுள்ளது.
பட்டய தணிக்கையாளர்கள் சங்கத்தினர் தனி நபர் ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்ப டையில் கால அவகாசம் நீட்டிக் கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டு தொழில் துறை யினர் டிடிஎஸ் பிடித்தம்செய்த விவரத்தை (படிவம் 24 க்யூ) தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மே 31-லிருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படிவம் 16-ஐ தாக்கல் செய்வதற்கு ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக படிவம் 16 எஸ் தாக்கல் செய்வதற்கு 21 நாள் அவகாசம் மட்டுமே இருந்தது. இதன் காரணமாகவும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-ம் தேதிக்குள் தனி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்யத் தவறினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று இருந்தது. இந்நிலையில் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments